Thursday 30 July 2015

அணு நாயகன் பார்வையில் ஆயுர்வேதம்


மாண்புமிகு  மறைந்த  முன்னால்  இந்திய  ஜனாதிபதியான  பாரதரத்னா  டாக்டர்  .பி.ஜே. அப்துல்  கலாம்  கேரளாவில், திருசூரில்  உள்ள  வைத்தியரத்னம்  ஆயுர்வேத  வைத்தியசாலையில்  நிறுவ பட்ட  ஆயுர்வேத அருங்காட்சியத்தை  திறந்துவைத்து  உரையாற்றும்பொழுது  ஆயுர்வேதம் பற்றிய  தங்கருத்தைக் கூறும்பொழுது :  “  இயற்கை  அடிப்படையில்  நோய்கள்  வராமல்  தடுக்க  , ஒருங்கிணைந்த,  விரிவான , நச்சுதன்மை கலக்காதஒரு  சிறந்த  மருத்துவ முறையே  "ஆயுர்வேதம்"  ஆகும்  மேலும் மருத்துவ தொழில்நுட்பம்  வேகமாக  வளர்ச்சி  அடைந்தாலும்  மக்கள்  புது நோய்களால்  பாதிக்கபடுகிறார்கள்  மற்றும்  மக்கள்  தன்  உடலை பேணிக்காக்க  ஆகும்  செலவும் அதிகரித்து  வருகிறது.  இந்நிலையில் உடல்நல  செலவு  குறைக்கபட  ஏதேனும்  ஒரு  சிறந்த  தடுப்பு  முறையை செயல்  படுத்த  வேண்டும்.  இங்ஙனம்  ஆயுர்வேத  மருத்துவ  முறைகள் மூலமாக  மட்டுமே  நோய்களை  தடுத்து  உடல்நலம் பேணும்  செலவுகளை  குறைக்க  முடியும் “  என்றார்.

பழமையான இந்திய மருத்துவமுறையாக ஆயுர்வேதம் உலக அளவில் புதுமை படுத்த படவேண்டும் என்று கலாம்  அவர்கள் பன்னாட்டு  ன்.ஜீ. தலைவரான  ப்ரஃபுல்படீலிடம்  கூறினார் .கலாம் அவர்கள் ஆயுர்வேத மருத்துவத்தின்  மீது  மிக  பேரன்பு  கொண்டிருந்தார் . இந்தியா  மற்றும் வெளிநாடுகளில் ஆயுர்வேத மருந்து பயன்படுத்துவதில் ஏற்படும் சவால்களை தீர்க்க  ஆலோசனை  வழங்கினார். ஆயுர்வேத  மூலிகை  மற்றும்  ரசாயணா பொருட்கள்  ஆராய்ச்சி  மற்றும்  வளர்ச்சி  மையம்  துவங்க வலியுறுத்தினார். இம் மையமானது   உணவு  சோதனை  பிரிவு  மற்றும்  ஆயுர்வேத  பாரம்பரிய மருத்துவ முறை பொருட்களின் குணம்,பாதுகாப்பு, உறுதிதன்மை மற்றும்  நோய் தீர்க்கும் திறன் போன்ற வற்றிற்கான சான்றிதழ் அளிக்கும் பிரிவை பெற்றிருக்க வேண்டும் என்று யோசனை கூறினார் .
உலக அளவில் தேவைப்படும் மூலிகை செடிகளின் உற்பத்தியில் இன்று சீனா நம் நாட்டை விட  அதிக அளவில் ஏற்றுமதி செய்கிறது ஆனால் நம்நாடு அரை மில்லியன் டாலர்கள்  அளவு  மட்டுமே  ஏற்றுமதி செய்கிறது இது மாற்ற படவேண்டும் .நம் நாட்டில் மிக  பரந்த இடம் இமயம் முதல் குமரிவரை  பரந்து இருக்கிறது.இப்பகுதிகளில் மூலிகை செடிகளை மிக பெரிய அளவில் வளர்க்க சூழல் உள்ளது . இந்த மூலிகைகளை வளர்க்க பெரும் முதலீடுகளை செய்ய மிகப்பெரிய நிறுவனங்களை ஊக்குவித்து நம் நாட்டில் உள்ள விவசாய மக்களுடன் இணைந்து  நேரடியாக ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் .
குஜராத் மாநிலத்தில்  ‘அமுல் பால் பண்ணை திட்டம்’ போன்று நேரடியாக விவசாயிகளிடமிருந்து மூலிகை செடிகளை கொள்முதல்  செய்து  மிகுந்த உற்பத்தியை  பெருக்கலாம். நோய்களை  தீர்பதிலும் அவை வராமல் தடுப்பதிலும், மூலிகை செடிகள் மிகப்பெரிய வாய்ப்பை பெற்று இருக்கின்றன. உடல் , மனது , உணவு மற்றும் சூழல் அடிப்படையில் அணுகி  நோய் தடுக்க  பட  வேண்டும் .
புதிய மருந்துகள் வளர்ச்சி பெற நாம் பாரம்பரிய மருத்துவ செடிகளை பற்றிய விவரங்களை கணினியில் தொகுத்து வைக்கப்படவேண்டும் . புதிய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான போதிய வசதிகள் மேம்படவும் மற்றும் அதற்கான வழிமுறைகளை இணைக்க இது தக்க தருணமாகும் . ' அனைவருக்குமான ஒருங்கிணைந்த நலம்' எனும் இயக்கத்தை ஆயுர்வேதம் மற்றும் அலொபதி கூட்டுமுயற்சியாக நோய்கள் தீர்ப்பதற்கான புதிய முறைகளை ஆராய்ச்சிகள் மூலம் கண்டு செயல் படுத்த வேண்டும் .
ஆயுர்வேத  மருத்துவமனை  மற்றும் கல்லூரிகள் ஒன்றோடு ஒன்று இணையதளம் மூலம் இணைத்து தங்களது அறிவு , அனுபவம் மற்றும் சிகிச்சை முறைகளை பகிர்ந்து கொள்ளவைக்கவேண்டும். நாம் ஒவ்வொருவரும் சிறப்பாக இதில் ஈடுபடுத்தி உடல் நலம் பேனவும் மற்றும் நோய்கள் தீர்ககவும், தடுக்கவும் , நோயாளிகளை துன்பங்களிடமிருந்து  விடுதலை பெறவும், இந்த ஆயுர்வேத மருத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி நோய்யற்ற  சமுதாயத்தை வளர்க்க பணிபுரிவோம் என்று மாமேதை கலாம் அவர்கள் வலியுறுத்தினார் கள் .
                           தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
               வன்மையு ளெல்லாந் தலை.
        என்ற குறள் கேற்ப அவரது கனவான  2020 வை  நிறைவேற்ற பாடுபடுவோம் !!.

- ரங்கபத்மினி .பா
    வயம்
(Picture source: unknown)

0 comments:

Post a Comment